Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ செஞ்சி அருகே ரூ.1 கோடி பறிமுதல்

செஞ்சி அருகே ரூ.1 கோடி பறிமுதல்

செஞ்சி அருகே ரூ.1 கோடி பறிமுதல்

செஞ்சி அருகே ரூ.1 கோடி பறிமுதல்

ADDED : ஜூன் 28, 2024 11:49 PM


Google News
Latest Tamil News
விக்கிரவாண்டி:விழுப்புரம் அடுத்த மழவந்தாங்கல் சோதனைச்சாவடியில் சப் - இன்ஸ்பெக்டர்கள் ஆனந்த்குமார், சரவணன் ஆகியோர் தலைமையில் போலீசார் நேற்று மாலை வாகன சோதனை மேற்கொண்டனர்.

மாலை 4:00 மணிக்கு விழுப்புரம் நோக்கி வந்த டி.என்., 10 - பி.யூ.,8118 பதிவெண் கொண்ட, 'ஹூண்டாய்' காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், இரண்டு டிராலி பேக்குகளில் கட்டுக்கட்டாக, 1 கோடி ரூபாய் பணம் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து காரில் வந்தவரிடம் விசாரணை நடத்தியதில், சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த டாக்டர் மதனகோபால், 48, கோவையில் அவரது தந்தை பழனியப்பனுக்கு சொந்தமான இடத்தை 1.10 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்து விட்டு, அந்த பணத்தை எடுத்து வருவதாகக் கூறி, அதற்கான ஆவணங்களைக் காட்டினார்.

எனினும், சந்தேகமடைந்த போலீசார், இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும், காரில் இருந்த பணத்தை கைப்பற்றி, விழுப்புரம் கருவூலத்தில் ஒப்படைத்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us