/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ சோதனை சாவடியில் கலால் அதிகாரிகள் ஆய்வு சோதனை சாவடியில் கலால் அதிகாரிகள் ஆய்வு
சோதனை சாவடியில் கலால் அதிகாரிகள் ஆய்வு
சோதனை சாவடியில் கலால் அதிகாரிகள் ஆய்வு
சோதனை சாவடியில் கலால் அதிகாரிகள் ஆய்வு
ADDED : மார் 14, 2025 04:56 AM

வானூர்: மொரட்டாண்டி டோல்கேட்டில் உள்ள பட்டானூர் சோதனைச் சாவடியில், கலால் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் கலால் உதவி ஆணையர் ராஜூ தலைமையில் நடந்த சோதனையில், அந்த வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது, சாராயம், மதுபாட்டில் கடத்துபவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். இருசக்கர வாகனங்கள், பஸ் மற்றும் வேன்களில் கண்காணித்து, மதுபாட்டில்கள் கடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலால் போலீசாருக்கு அறிவுறுத்தினார்.
ஆய்வின் போது, கோட்ட கலால் அலுவலர் கோவர்தனன், வருவாய் ஆய்வாளர்கள் அன்பழகன், சரவணன், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார், காவலர் மலையாளத்தான் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.