/உள்ளூர் செய்திகள்/வேலூர்/ வேலுார் மாநகராட்சியில் 28 நாட்களுக்கு குடிநீர் 'கட்' வேலுார் மாநகராட்சியில் 28 நாட்களுக்கு குடிநீர் 'கட்'
வேலுார் மாநகராட்சியில் 28 நாட்களுக்கு குடிநீர் 'கட்'
வேலுார் மாநகராட்சியில் 28 நாட்களுக்கு குடிநீர் 'கட்'
வேலுார் மாநகராட்சியில் 28 நாட்களுக்கு குடிநீர் 'கட்'
ADDED : மே 12, 2025 03:53 AM
வேலுார்: வேலுார் மாநகராட்சி உள்பட, 11 நகராட்சிகள் மற்றும் ஊரக பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் காவேரி கூட்டு குடிநீர் திட்டத்தில், பராமரிப்பு பணி நடக்கிறது. இதனால் இப்பகுதிகளுக்கு காவிரி குடிநீர் வினியோகம், 28 நாட்களுக்கு இருக்காது.
இதுகுறித்து தமிழக குடிநீர் வடிகால் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வேலுார் மாநகராட்சி, 11 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள் மற்றும் ஊரக பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும், காவிரி கூட்டு குடிநீர் நீரேற்று நிலையமான, மேட்டூர் செக்கானுாரணி கதவணை நீரேற்று நிலையத்தில், வருடாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.இன்று தொடங்கி ஜூன், 8 வரை, 28 நாட்களுக்கு நடப்பதால், வேலுார் கூட்டு குடிநீர் திட்டத்தில் இருந்து குறைந்த அளவு நீரே வழங்க முடியும். எனவே வேலுார் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊரக வளர்ச்சிதுறையினர் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்துடன் இணைந்து, உள்ளூர் குடிநீர் ஆதாரத்தை சிக்கனமாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.