/உள்ளூர் செய்திகள்/வேலூர்/தொகுப்பு வீடு இடிந்ததில் புனரமைப்பு பணியாளர் பலிதொகுப்பு வீடு இடிந்ததில் புனரமைப்பு பணியாளர் பலி
தொகுப்பு வீடு இடிந்ததில் புனரமைப்பு பணியாளர் பலி
தொகுப்பு வீடு இடிந்ததில் புனரமைப்பு பணியாளர் பலி
தொகுப்பு வீடு இடிந்ததில் புனரமைப்பு பணியாளர் பலி
ADDED : ஜன 25, 2024 01:21 AM
காட்பாடி:வேலுார் மாவட்டம், காட்பாடி அடுத்த கே.வி.குப்பம், குறிஞ்சி நகரை சேர்ந்தவர் கணேஷ், 50. இவர், 25 ஆண்டுகளுக்கு முன், அரசு வழங்கிய தொகுப்பு வீட்டில் குடும்பத்துடன் வசிக்கிறார். அந்த தொகுப்பு வீட்டின் கான்கிரீட் தளம் சேதமானதால், அதை சீரமைக்கும் பணியில், இரண்டு நாட்களாக அப்பகுதியை சேர்ந்த நாகராஜன், 26, பொன்னரசு, 22, அறிவழகன், 21, ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலையில் புனரமைப்பு பணியின்போது, அந்த வீட்டின் கான்கிரீட் கூரை திடீரென இடிந்து விழுந்தது. இதில் நாகராஜன், பொன்னரசு மற்றும் அறிவழகன் சிக்கினர். அவர்களை அப்பகுதியினர் மீட்டனர்.
எனினும், இடிபாடுகளில் சிக்கி, அறிவழகன் பலியானார்; நாகராஜன், பொன்னரசு படுகாயத்துடன் மீட்கப்பட்டனர். இந்த விபத்தை, கே.வி.குப்பம் போலீசார் விசாரிக்கின்றனர்.