/உள்ளூர் செய்திகள்/வேலூர்/பைக்குகள் மோதலில் புது மாப்பிள்ளை பலிபைக்குகள் மோதலில் புது மாப்பிள்ளை பலி
பைக்குகள் மோதலில் புது மாப்பிள்ளை பலி
பைக்குகள் மோதலில் புது மாப்பிள்ளை பலி
பைக்குகள் மோதலில் புது மாப்பிள்ளை பலி
ADDED : ஜூலை 20, 2024 05:52 PM
வேலுார் : குடியாத்தம் அருகே, டூவீலர்கள் மோதிக்கொண்டதில், புது மாப்பிள்ளை பலியானார்.
வேலுார் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த லட்சுமணபுரத்தை சேர்ந்தவர் மேதேஷ், 21; பொக்லைன் இயந்திர டிரைவர்; இவரின் மனைவி இந்துமதி, 20; திருமணமாகி மூன்று மாதமாகிறது. தம்பதியர் அணைக்கட்டு பகுதியிலுள்ள உறவினர் வீட்டுக்கு ஹோண்டா பைக்கில் சென்று விட்டு வீடு திரும்பினர். வேப்பூர் அருகே எதிரே வந்த மற்றொரு ஹோண்டா பைக் மோதியது. இதில் மேதேஷ் சம்பவ இடத்தில் பலியானார். படுகாயமடைந்த இந்துமதி, வேலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மற்றொரு பைக்கில் வந்தவர் லேசான காயமடைந்தார். குடியாத்தம் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.