/உள்ளூர் செய்திகள்/வேலூர்/ பிரபல தனியார் ஷோரூமில் தங்க நாணயங்கள் திருட்டு பிரபல தனியார் ஷோரூமில் தங்க நாணயங்கள் திருட்டு
பிரபல தனியார் ஷோரூமில் தங்க நாணயங்கள் திருட்டு
பிரபல தனியார் ஷோரூமில் தங்க நாணயங்கள் திருட்டு
பிரபல தனியார் ஷோரூமில் தங்க நாணயங்கள் திருட்டு
ADDED : ஜூன் 02, 2025 04:08 AM
குடியாத்தம்: வேலுார் மாவட்டம் குடியாத்தத்தில், 'வசந்த் அண்ட் கோ' எலக்ட்ரானிக்ஸ் கடை உள்ளது. மேலாளர் நேற்று காலை வழக்கம்போல் கடையை திறக்க சென்றார். கடைக்குள் இருந்த பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன.
கடையை சுற்றி பார்த்ததில், பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. பீரோவில் வைக்கப்பட்டிருந்த, 93,000 ரூபாய், வாடிக்கையாளர்களுக்கு வழங்க வைத்திருந்த ஒரு கிராம் அளவிலான, 16 தங்க நாணயம், 40 வெள்ளி நாணயங்கள் திருட்டு போனது தெரியவந்தது. புகாரின்படி குடியாத்தம் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.