/உள்ளூர் செய்திகள்/வேலூர்/மாணவி கடத்தி பலாத்காரம்: போக்சோவில் வாலிபர் கைதுமாணவி கடத்தி பலாத்காரம்: போக்சோவில் வாலிபர் கைது
மாணவி கடத்தி பலாத்காரம்: போக்சோவில் வாலிபர் கைது
மாணவி கடத்தி பலாத்காரம்: போக்சோவில் வாலிபர் கைது
மாணவி கடத்தி பலாத்காரம்: போக்சோவில் வாலிபர் கைது
ADDED : ஜன 06, 2024 01:04 PM
ஒடுகத்துார்: வேலுார் அருகே ராங்-காலில் காதல் ஏற்பட்டு, மாணவியை கடத்தி பலாத்காரம் செய்த வாலிபரை, போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
வேலுார் மாவட்டம் ஒடுகத்துாரை அடுத்த ஆசனாம்பட்டு கிராமத்தை சேர்ந்த தொழிலாளி செல்வராஜ், 26; வேலுாரை அடுத்த பேரணாம்பட்டை சேர்ந்த பிளஸ் 1 படிக்கும், 16 வயது மாணவி மொபைல்போனுக்கு, சில மாதங்களுக்கு முன் ராங்-கால் செய்தார். இதனால் இருவருக்கும் காதல் ஏற்பட்டது. கடந்த மாதம், 27ம் தேதி மாணவியை திருமணம் செய்து கொள்வதாக கடத்தி சென்று, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.நேற்று முன்தினம் மாணவியை பேரணாம்பட்டுக்கு அழைத்து, 'இனிமேல் என்னிடம் பேசக்கூடாது, உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது' என கூறியுள்ளார். இதுகுறித்து மாணவி அளித்த புகார்படி, வேப்பங்குப்பம் போலீசார் விசாரித்தனர். செல்வராஜை போக்சோ சட்டத்தில் நேற்று கைது செய்தனர்.