/உள்ளூர் செய்திகள்/வேலூர்/ குடியிருப்புகள் சேதம் பார்வையற்றோர் தர்ணா குடியிருப்புகள் சேதம் பார்வையற்றோர் தர்ணா
குடியிருப்புகள் சேதம் பார்வையற்றோர் தர்ணா
குடியிருப்புகள் சேதம் பார்வையற்றோர் தர்ணா
குடியிருப்புகள் சேதம் பார்வையற்றோர் தர்ணா
ADDED : ஜூன் 12, 2025 02:50 AM
வேலுார்,:வேலுார் அருகே பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட குடியிருப்புகள், ஐந்து ஆண்டுகளிலேயே இடிந்து விழும் நிலையில் உள்ளதால், அவற்றை புதுப்பித்து தர வலியுறுத்தி, மாற்றுத்திறனாளிகள் தர்ணாவில் ஈடுபட்டனர். -
வேலுார் மாவட்டம், காட்பாடி அடுத்த ஆரிமுத்துார் மோட்டூர் கிராமத்தில், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள், 24 பேருக்கு, தமிழக அரசு சார்பில், தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டு, 2020, ஜூன், 27ல் வழங்கப்பட்டது.
ஐந்து ஆண்டுகளிலேயே வீடுகள் சேதமடைந்து இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.
எனவே, இதை சீரமைத்து தர வலியுறுத்தி, பார்வையற்றோர் மாற்றுத்திறனாளிகள், நேற்று குடியிருப்பு அருகிலேயே, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இவர்களது கோரிக்கைகளை கேட்க, அதிகாரிகள் யாரும் முன்வராததால், மாற்றுத்திறனாளிகள் தானாகவே, போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.