/உள்ளூர் செய்திகள்/வேலூர்/ சாக்கடையில் இறங்கிய தேர் சக்கரம் பக்தர்கள் அலறியடித்து ஓட்டம் சாக்கடையில் இறங்கிய தேர் சக்கரம் பக்தர்கள் அலறியடித்து ஓட்டம்
சாக்கடையில் இறங்கிய தேர் சக்கரம் பக்தர்கள் அலறியடித்து ஓட்டம்
சாக்கடையில் இறங்கிய தேர் சக்கரம் பக்தர்கள் அலறியடித்து ஓட்டம்
சாக்கடையில் இறங்கிய தேர் சக்கரம் பக்தர்கள் அலறியடித்து ஓட்டம்
ADDED : மே 15, 2025 01:24 AM
குடியாத்தம், குடியாத்தத்தில், கங்கையம்மன் திருவிழாவில் நடந்த தேரோட்டத்தின்போது தேர் சக்கரம் கழிவுநீர் கால்வாயில் இறங்கி சாய்ந்ததால், பக்தர்கள் அலறியடித்து ஓடினர்.
வேலுார் மாவட்டம், குடியாத்தத்தில், கங்கையம்மன் சிரசு திருவிழாவையொட்டி நேற்று, கங்கையம்மன் தேர் திருவிழா காலை, 10:00 மணியளவில் நடந்தது. மாலை, 5:30 மணியளவில், 25 அடி அகலமுள்ள கண்ணகி தெருவில் தேர் சென்றது. அப்போது, போலீசாரும்,
வருவாய்த்துறையினரும், இரவு, 9:00 மணிக்குள் தேரை நிலைநிறுத்த, தேர்கட்டை போடுபவர்களிடம் அழுத்தம் கொடுத்தனர். இதனால், தேரை வேகமாக இழுத்து சென்றதில், கண்ணகி தெருவில், 5 டன் எடையுள்ள தேர், திடீரென கழிவுநீர் கால்வாயில் இறங்கி
ஒரு பக்கமாக சாய்ந்தது.
இதனால், பக்தர்கள் அலறியடித்து ஓடினர். பின்னர், யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாத நிலையில், பொக்லைன் இயந்திரம் கொண்டு இரவு, 7:30 மணியளவில் கால்வாயிலிருந்து தேரை மீட்டு, மீண்டும் தேரோட்டம் நடத்தப்பட்டது.