/உள்ளூர் செய்திகள்/வேலூர்/ஜல்லி கற்கள் ஏற்றி வந்த டிராக்டர் மோதி மாற்றுத்திறனாளி பலி; கிராம மக்கள் மறியல்ஜல்லி கற்கள் ஏற்றி வந்த டிராக்டர் மோதி மாற்றுத்திறனாளி பலி; கிராம மக்கள் மறியல்
ஜல்லி கற்கள் ஏற்றி வந்த டிராக்டர் மோதி மாற்றுத்திறனாளி பலி; கிராம மக்கள் மறியல்
ஜல்லி கற்கள் ஏற்றி வந்த டிராக்டர் மோதி மாற்றுத்திறனாளி பலி; கிராம மக்கள் மறியல்
ஜல்லி கற்கள் ஏற்றி வந்த டிராக்டர் மோதி மாற்றுத்திறனாளி பலி; கிராம மக்கள் மறியல்
ADDED : ஜன 06, 2024 05:26 PM
வேலுார் : ஜல்லி கற்கள் ஏற்றி வந்த டிராக்டர் மோதி மாற்றுத்திறனாளி சிறுவன் பலியானானதை கண்டித்து, கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
வேலுார் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த மொரசப்பல்லியில் கல்குவாரி மற்றும் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. நேற்று காலை, கல்குவாரியிலிருந்து ஜல்லி ஏற்றி வந்த டிராக்டர் மோதியதில், மாற்றுத்திறனாளியான சேட்அலி, 14, என்ற சிறுவன் சம்பவ இடத்திலேயே பலியானார். ஆத்திரமடைந்த அக்கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, கல்குவாரியிலிருந்து ஜல்லி ஏற்றி வரும் வாகனங்கள் அதிவேகமாக வருவதாகவும், டாஸ்மாக் கடை உள்ளதால், பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் குடிமகன்கள், இங்குள்ள பெண்கள், பள்ளி மாணவிகளிடம் ஆபாசமாக பேசி, இடையூறு செய்வதாகவும் புகார் தெரிவித்தனர். எனவே, கல்குவாரி மற்றும் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும், மாற்றுத்திறனாளி சிறுவன் பலியானதற்கு காரணமான, டிராக்டர் டிரைவரை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தினர்.பேரணாம்பட்டு போலீசார் சம்பவ இடம் சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேசி, போராட்டத்தை கைவிட செய்து, தப்பியோடிய டிராக்டர் டிரைவரை தேடி வருகின்றனர்.