/உள்ளூர் செய்திகள்/வேலூர்/ லாரி மோதியதில் சுவர் இடிந்து தொழிலாளி பலி லாரி மோதியதில் சுவர் இடிந்து தொழிலாளி பலி
லாரி மோதியதில் சுவர் இடிந்து தொழிலாளி பலி
லாரி மோதியதில் சுவர் இடிந்து தொழிலாளி பலி
லாரி மோதியதில் சுவர் இடிந்து தொழிலாளி பலி
ADDED : ஜூன் 28, 2024 03:03 AM
பேரணாம்பட்டு:பேரணாம்பட்டில், லாரி மோதி சுவர் இடிந்து விழுந்ததில், இடிபாட்டில் சிக்கி தொழிலாளி பலியானார்.
வேலுார் மாவட்டம், பேரணாம்பட்டில், கோபால் என்பவருக்கு சொந்தமான மரப்பட்டறை உள்ளது. அங்கு அப்பகுதியை சேர்ந்த தேவேந்திரன், 52, என்பவர் கூலித்தொழிலாளியாக பணிபுரிந்தார். நேற்று மரக்கட்டைகளை ஏற்றிய மினி லாரி, மரப்பட்டறைக்கு வந்தது. மரக்கட்டைகளை இறக்க, பின்னோக்கி வந்த மினி லாரி, எதிர்பாராத விதமாக கேட் மீது மோதியது.
இதில், கேட் சுவர் இடிந்து விழுந்ததில், இடிபாட்டில் சிக்கிய தேவேந்திரன் சம்பவ இடத்திலேயே பலியானார். பேரணாம்பட்டு போலீசார் விசாரிக்கின்றனர்.