/உள்ளூர் செய்திகள்/வேலூர்/ ஊசூர் அருகே ஏரி துார்வாரியபோது 2 அடி உயர சிவலிங்கம் கண்டெடுப்பு ஊசூர் அருகே ஏரி துார்வாரியபோது 2 அடி உயர சிவலிங்கம் கண்டெடுப்பு
ஊசூர் அருகே ஏரி துார்வாரியபோது 2 அடி உயர சிவலிங்கம் கண்டெடுப்பு
ஊசூர் அருகே ஏரி துார்வாரியபோது 2 அடி உயர சிவலிங்கம் கண்டெடுப்பு
ஊசூர் அருகே ஏரி துார்வாரியபோது 2 அடி உயர சிவலிங்கம் கண்டெடுப்பு
ADDED : ஜூன் 05, 2024 06:45 AM
வேலுார் : வேலுார் அருகே, 100 நாள் வேலை திட்டத்தில் ஏரி துார்வாரியபோது, சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டது.
வேலுார் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த சேக்கனுார் பஞ்., பெரிய ஏரியில், 100 நாள் வேலை திட்டத்தில் புதிய குளம் வெட்டும் பணி நடந்து வருகிறது.
நேற்று, 100 நாள் வேலை தொழிலாளர்கள், 150க்கும் மேற்பட்டோர், ஏரியில் துார்வாரி, கரையை பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பள்ளம் வெட்டும்போது ஒரு கல் தென்பட்டது. அந்த கல்லை சுற்றி இருந்த மண்ணை அகற்றியபோது, 2 அடி உயர சிவலிங்கம் இருப்பதை பார்த்து, தொழிலாளர்கள் ஆச்சரியமடைந்தனர். இத் தகவல் பரவியதால், சேக்கனுார் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் அங்கு திரண்டனர்.
சிவலிங்கத்திற்கு, 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள், பொதுமக்கள் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து, மஞ்சள், குங்குமம், விபூதி பூசி, கற்பூர ஆரத்தி எடுத்து வழிபட்டனர். அந்த சிவலிங்கம், அணைக்கட்டு தாலுகா அலுவலகம் கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டது.