/உள்ளூர் செய்திகள்/வேலூர்/ வியாபாரியிடம் ரூ.30 லட்சம் கொள்ளையடித்த 4 பேர் கைது வியாபாரியிடம் ரூ.30 லட்சம் கொள்ளையடித்த 4 பேர் கைது
வியாபாரியிடம் ரூ.30 லட்சம் கொள்ளையடித்த 4 பேர் கைது
வியாபாரியிடம் ரூ.30 லட்சம் கொள்ளையடித்த 4 பேர் கைது
வியாபாரியிடம் ரூ.30 லட்சம் கொள்ளையடித்த 4 பேர் கைது
ADDED : ஜூன் 18, 2024 12:16 AM
வேலுார் : திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூரை சேர்ந்தவர் பராஸ் அகமது, 29, தோல், இரும்பு பொருள் வியாபாரம் செய்கிறார். அவரை, ஒரு கும்பல் கண்காணித்து வந்தது. கடந்த, 7ல் வியாபாரத்திற்கு தேவையான பொருட்களை வாங்க, 30 லட்சம் ரூபாயுடன் வேலுார் சென்றார். தரமான பொருட்கள் கிடைக்காததால் அன்றிரவு, 9:00 மணிக்கு பணத்துடன் ஊர் திரும்ப முடிவு செய்தார்.
வேலுார் - ஆற்காடு சாலையிலுள்ள ஒரு டீ கடை அருகே நடந்து சென்ற போது, அவ்வழியாக, இரண்டு பைக்குகளில் வந்த நான்கு பேர், கத்தியை காட்டி மிரட்டி, அவர் வைத்திருந்த, 30 லட்சம் ரூபாயை பறித்து தப்பினர். உடனடியாக அவர் வேலுார் வடக்கு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். உடனே சுதாரித்த போலீசார், அந்த கொள்ளையர்களை தேடினர். அடுத்த சில மணி நேரங்களிலேயே, வேலுார் தோட்டப்பாளையத்தை சேர்ந்த சரத், 28, தினேஷ், 30, பிரசாந்த், 26, மற்றும் குடியாத்தத்தை சேர்ந்த கோகுல், 26, ஆகியோரை கைது செய்தனர்.
பின் அவர்களிடமிருந்து, 30 லட்சம் ரூபாய் மற்றும் இரண்டு பைக்குகளை பறிமுதல் செய்து, விசாரித்து வருகின்றனர்.