Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/வேலூர்/ 5 மாவட்ட விவசாயிகளுக்கு ரயிலில் காட்பாடி வந்த 1,225 டன் யூரியா

5 மாவட்ட விவசாயிகளுக்கு ரயிலில் காட்பாடி வந்த 1,225 டன் யூரியா

5 மாவட்ட விவசாயிகளுக்கு ரயிலில் காட்பாடி வந்த 1,225 டன் யூரியா

5 மாவட்ட விவசாயிகளுக்கு ரயிலில் காட்பாடி வந்த 1,225 டன் யூரியா

ADDED : ஜூலை 18, 2024 09:29 PM


Google News
வேலுார்:திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்துார் உட்பட, 5 மாவட்டங்களுக்கு, மணலியிலிருந்து, 1,225 டன் யூரியா, காட்பாடிக்கு ரயில் மூலம் கொண்டு வரப்பட்டு, அவற்றை அந்தந்த மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பும் பணி நடக்கிறது.

தமிழகத்தில் விவசாய பணிகளுக்காக, சென்னை, துாத்துக்குடியிலிருந்து, யூரியா, டி.ஏ.பி., காம்பளக்ஸ் உரங்கள், சரக்கு ரயில்கள் மூலமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகிறது. அதன்படி, மணலியில் இருந்து, திருவண்ணாமலை, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய, 5 மாவட்ட விவசாயிகளுக்கு தேவையான யூரியா கிடைக்கும் வகையில், 1,225 டன் யூரியா, நேற்று ரயிலில் காட்பாடிக்கு வந்தது.

இதில், வேலுார் மாவட்டத்திற்கு, 100 டன், திருப்பத்துார், 70 டன், ராணிப்பேட்டை, 300 டன், திருவண்ணாமல, 630 டன், காஞ்சிபுரம், 125 டன் என மொத்தம், 1,225 டன் யூரியா லாரிகள் மூலம் பிரித்து அனுப்பும் பணி நடக்கிறது. விவசாயிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி மற்றும் தனியார் உரக்கடைகளில் பெற்று கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us