/உள்ளூர் செய்திகள்/திருச்சி/ ரூ.5 கோடி புது ரக கஞ்சா திருச்சி ஏர்போர்ட்டில் மீட்பு ரூ.5 கோடி புது ரக கஞ்சா திருச்சி ஏர்போர்ட்டில் மீட்பு
ரூ.5 கோடி புது ரக கஞ்சா திருச்சி ஏர்போர்ட்டில் மீட்பு
ரூ.5 கோடி புது ரக கஞ்சா திருச்சி ஏர்போர்ட்டில் மீட்பு
ரூ.5 கோடி புது ரக கஞ்சா திருச்சி ஏர்போர்ட்டில் மீட்பு
ADDED : மார் 25, 2025 02:55 AM

திருச்சி : தென்கிழக்கு ஆசிய நாடான மலேஷிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, நேற்று முன்தினம் காலை, 8:00 மணிக்கு, 'ஏர் ஏசியா' விமானம் திருச்சி வந்தது.
விமான நிலையத்தில் பயணியரின் உடைமைகளை சுங்கத்துறை மற்றும் மத்திய புலனாய்வு துறை அதிகாரிகள் சோதனை செய்ததில், சந்தேகப்படும்படி வந்த பயணி உடைமையில், 5.155 கிலோ ஹைட்ரோபோனிக் என்ற முறையில் வளர்க்கப்பட்ட கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது.
இதன் சர்வதேச மதிப்பு, 5.15 கோடி ரூபாய். போதைப் பொருளை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிகாரிகள் கூறுகையில், 'நீரியல் வளர்ப்பு அல்லது மண் இல்லா வேளாண்மையை, 'ஹைட்ரோ போனிக்' வளர்ப்பு முறை என்கின்றனர். கனிம ஊட்ட கூறுகளை கொண்ட நீர்ம வளர்ப்பு கரைசல்களை பயன்படுத்தி தாவரங்களை வளர்க்கும் முறை இது. அதனால் இந்த போதைப்பொருள் விலை அதிகம்' என்றனர்.