/உள்ளூர் செய்திகள்/திருச்சி/திருச்சியில் முதல் முறையாக 65 கவுன்சிலர்களுக்கு ஆபீஸ்திருச்சியில் முதல் முறையாக 65 கவுன்சிலர்களுக்கு ஆபீஸ்
திருச்சியில் முதல் முறையாக 65 கவுன்சிலர்களுக்கு ஆபீஸ்
திருச்சியில் முதல் முறையாக 65 கவுன்சிலர்களுக்கு ஆபீஸ்
திருச்சியில் முதல் முறையாக 65 கவுன்சிலர்களுக்கு ஆபீஸ்
ADDED : ஜன 05, 2024 12:05 AM
திருச்சி:கவுன்சிலர்களுக்கு தனியாக அலுவலகம் கட்டித்தர வேண்டும் என, நீண்ட நாட்களாக கோரிக்கை இருந்து வருகிறது. அதிக நிதி தேவைப்படும் என்பதால், இது நிறைவேற்ற முடியாத கோரிக்கையாக இருந்து வந்தது.
இந்நிலையில், திருச்சி மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு அலுவலகம் கட்டித் தரப்படும் என, மேயர் அன்பழகன் அறிவித்துள்ளார்.
அதன்படி, திருச்சி மாநகராட்சியின், 65 கவுன்சிலர்களுக்கும் வரும் மார்ச் மாதத்துக்குள் அலுவலகம் கட்டப்படும் என, நேற்று முன்தினம் நடந்த கவுன்சிலர்கள் கூட்டத்தில் மேயர் அறிவித்துள்ளார். ஒரு அலுவலகம் கட்ட, 25 லட்சம் ரூபாய் வீதம், மொத்தம், 16.25 கோடி ரூபாய் செலவாகும் என, மதிப்பிடப்பட்டு, மாநகராட்சி பொது நிதியில் இருந்து நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த அலுவலகத்துடன் சேர்த்து, வார்டு துாய்மை பணியாளர்களுக்கான ஓய்வறை, பணிக்கான தளவாடங்களை வைத்துக் கொள்ளும் இடம் ஆகியவையும் இடம் பெறுகின்றன.
சென்னை மாநகராட்சி தவிர்த்து, தமிழகத்தில் முதல் முறையாக, திருச்சி மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு அலுவலகம் கட்ட முடிவு செய்திருப்பது, மாநகராட்சி கவுன்சிலர்கள் மத்தியில், கட்சி பேதமின்றி வரவேற்பை பெற்றுள்ளது.