/உள்ளூர் செய்திகள்/திருச்சி/ விமானத்தில் ரகளை மன்னார்குடி நபர் கைது விமானத்தில் ரகளை மன்னார்குடி நபர் கைது
விமானத்தில் ரகளை மன்னார்குடி நபர் கைது
விமானத்தில் ரகளை மன்னார்குடி நபர் கைது
விமானத்தில் ரகளை மன்னார்குடி நபர் கைது
ADDED : ஜூன் 24, 2025 06:31 AM
திருச்சி: சிங்கப்பூரில் இருந்து நேற்று அதிகாலை திருச்சி வந்த, 'இண்டிகோ' விமானத்தில், பயணத்தின் நடுவே பயணி ஒருவர் குடிபோதையில் சக பயணியர், விமான பணிப்பெண்களிடம் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.
விமானம் திருச்சி வந்ததும், அந்த பயணியை பிடித்து, விமான நிலைய போலீசில் விமான ஊழியர்கள் ஒப்படைத்துள்ளனர்.
அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியைச் சேர்ந்த மகேஸ்வரன், 42, என்பதும், சிங்கப்பூரில் இருந்து சொந்த ஊர் திரும்பிய அவர், விமானத்தில் மதுபானம் குடித்துவிட்டு, போதையில் சக பயணியர், விமான பணிப்பெண்களிடம் ரகளையில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.