/உள்ளூர் செய்திகள்/திருச்சி/ பொது இடங்களில் விலங்குகளை வெட்டுவதற்கு தடை கோரிக்கை பொது இடங்களில் விலங்குகளை வெட்டுவதற்கு தடை கோரிக்கை
பொது இடங்களில் விலங்குகளை வெட்டுவதற்கு தடை கோரிக்கை
பொது இடங்களில் விலங்குகளை வெட்டுவதற்கு தடை கோரிக்கை
பொது இடங்களில் விலங்குகளை வெட்டுவதற்கு தடை கோரிக்கை
ADDED : ஜூன் 05, 2025 02:24 AM
திருச்சி:'முஸ்லிம்களின், பக்ரீத் பண்டிகையின்போது, பொது இடங்களில் விலங்குகள் வெட்டுவதை அனுமதிக்கக் கூடாது' என்று திருச்சி மாவட்ட விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம், அந்த அமைப்பினர் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:
தமிழக அரசின் விதிமுறைகளின்படி, மாடு, ஒட்டகம் போன்ற விலங்குகள் அதற்குரிய இடங்களில் மட்டுமே வெட்டப்பட வேண்டும். பல நேரங்களில் இந்த விதிமுறை கடைபிடிக்கப்படுவதில்லை. வரும் 7ம் தேதி, முஸ்லிம்களின் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, திருச்சி மாநகரம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பொது இடங்களில், விதிமுறை மீறி மாடு, ஒட்டகம் போன்ற விலங்குகள் வெட்டப்பட உள்ளதாக தெரிகிறது. இதனால், பொது சுகாதார சீர்கேடு ஏற்படும்.
எனவே, நோய்த்தொற்றில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில், பொது இடங்களில் விலங்குகள் வெட்டப்படுவதை தடுத்து, அதற்கு உரிய இடங்களில் வெட்டுவதற்கு வழிவகை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தங்கள் மனுவில் கூறியுள்ளனர்.