/உள்ளூர் செய்திகள்/திருச்சி/ பார்சலில் காஸ் சிலிண்டர் அனுப்பியவர் மீது வழக்கு பார்சலில் காஸ் சிலிண்டர் அனுப்பியவர் மீது வழக்கு
பார்சலில் காஸ் சிலிண்டர் அனுப்பியவர் மீது வழக்கு
பார்சலில் காஸ் சிலிண்டர் அனுப்பியவர் மீது வழக்கு
பார்சலில் காஸ் சிலிண்டர் அனுப்பியவர் மீது வழக்கு
ADDED : செப் 07, 2025 01:22 AM
திருச்சி:ரயில்வே பார்சலில், காஸ் சிலிண்டர் அனுப்பியவர் மீது ரயில்வே பாதுகாப்பு படையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில், கடந்த 4ம் தேதி, பார்சலில் வந்த பொருட்களை, ரயில்வே பாதுகாப்பு படையினர் ஆய்வு செய்தனர். அப்போது, இரண்டு காஸ் சிலிண்டர்களை, வீட்டு உபயோகப் பொருட்கள் எனப் பதிவு செய்து, பாலிதீன் கவரில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.
நாகர்கோவிலில் இருந்து திருச்சி வந்த பார்சலில் அந்த காஸ் சிலிண்டர்கள் அனுப்பி இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். போலியான முகவரி கொடுத்து, ரயில்வே பார்சலில் காஸ் சிண்டர்களை அனுப்ப, பதிவு செய்த கரூர் மாவட்டத்தை சேர்ந்த முரளி, 49, என்பவர் மீது, ரயில்வே பாதுகாப்பு படையினர் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.