ADDED : மார் 27, 2025 02:57 AM
திருச்சி: திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே ராக்கம்பட்டியைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம், 25. வேலையில்லாமல் வீட்டில் இருந்து வந்தார். கடந்த, 2022ம் ஆண்டு, மணப்பாறை பகுதியில் தனியாக ஆடு மேய்த்துக் கொண்டிருந்த, 16 வயது சிறுமியை, அருகாமையில் உள்ள வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.
இதுகுறித்த புகாரின்படி, மணப்பாறை அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தில் சண்முகசுந்தரத்தை கைது செய்தனர்.
திருச்சி மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்த இவ்வழக்கில் சண்முகசுந்தரத்துக்கு, 5 ஆண்டுகள் சிறை, 15,000 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி நேற்று உத்தரவிட்டார்.