/உள்ளூர் செய்திகள்/திருச்சி/ 'பேனாவுக்கு பதில் அரிவாளுடன் பள்ளி செல்வது ஏன்' 'பேனாவுக்கு பதில் அரிவாளுடன் பள்ளி செல்வது ஏன்'
'பேனாவுக்கு பதில் அரிவாளுடன் பள்ளி செல்வது ஏன்'
'பேனாவுக்கு பதில் அரிவாளுடன் பள்ளி செல்வது ஏன்'
'பேனாவுக்கு பதில் அரிவாளுடன் பள்ளி செல்வது ஏன்'
ADDED : ஜூலை 31, 2024 01:59 AM
சென்னை:ஸ்ரீரங்கம் அரசு பள்ளியில், மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலை தடுக்க முயன்ற ஆசிரியர் வெட்டப்பட்டதற்கு, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
திருச்சி, ஸ்ரீரங்கம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில், இரு தரப்பு மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலை தடுக்க முயன்ற சிவகுமார் என்ற ஆசிரியரின் தலையில், ஒரு மாணவர் அரிவாளால் வெட்டியதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
கடவுளுக்கும் மேல் வைத்து கொண்டாடப்பட வேண்டியவர்கள் ஆசிரியர்கள். ஆனால், சமீப காலமாக ஆசிரியர்கள், மாணவர்களால் தாக்கப்படும்; அவமதிக்கப்படும் நிகழ்வுகள் அதிகரித்துள்ன. அனைவருக்கும் கவலை அளிக்கும் இப்பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்.
தெருவுக்குத் தெரு மதுக்கடைகளை திறந்து வைத்து, கைக்கெட்டும் தொலைவில் கஞ்சா கிடைப்பதை அனுமதித்துவிட்டு, மாணவர்களை மட்டும் இத்தகைய சீர்கேடுகளுக்கு பொறுப்பாக்குவது சரியானது அல்ல. பேனாக்களை எடுத்துச்செல்ல வேண்டிய வயதில், அரிவாளுடன் செல்வது ஏன் என்ற கேள்விக்கு விடை காண வேண்டும்.
பள்ளி வளாகங்களை பாதுகாப்பானதாகவும், ஆசிரியர்கள் மதிக்கப்படக்கூடிய இடமாகவும் மாற்ற, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்..