/உள்ளூர் செய்திகள்/திருச்சி/ கார்கள் நேருக்கு நேர் மோதல் இருவர் பலி; இருவர் படுகாயம் கார்கள் நேருக்கு நேர் மோதல் இருவர் பலி; இருவர் படுகாயம்
கார்கள் நேருக்கு நேர் மோதல் இருவர் பலி; இருவர் படுகாயம்
கார்கள் நேருக்கு நேர் மோதல் இருவர் பலி; இருவர் படுகாயம்
கார்கள் நேருக்கு நேர் மோதல் இருவர் பலி; இருவர் படுகாயம்
ADDED : ஜூன் 19, 2024 02:12 AM
புலிவலம்:திருச்சி, ஸ்ரீரங்கம் பாரதி நகரை சேர்ந்த கோவிந்தராஜ், 29, அதே பகுதியை சேர்ந்த அய்யப்பன், 33, ஜே.ஜே.நகரை சேர்ந்த ராஜா, 39, அம்மாமண்டபம் புதுநகரை சேர்ந்த கோபாலகிருஷ்ணன், 30, ஆகியோர் 'மாருதி ஆம்னி' காரில், புளியஞ்சோலை சென்று, மீண்டும் ஸ்ரீரங்கம் திரும்பிக் கொண்டிருந்தனர். துறையூரை சேர்ந்த அஜய்பிரசாத், 28, திருச்சியில் இருந்து துறையூர் நோக்கி, 'சுசூகி' காரில் வந்தார். புலிவலம் பகுதியில் உள்ள தனியார் கல்லுாரி அருகே வந்த போது, இரண்டு கார்களும் நேருக்கு நேர் மோதின.
இதில், காயமடைந்த நான்கு பேர், துறையூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கோவிந்தராஜ் சிகிச்சை பலனின்றி இறந்தார். மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட கோபாலகிருஷ்ணன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்ற இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புலிவலம் போலீசார் விசாரிக்கின்றனர்.