/உள்ளூர் செய்திகள்/திருச்சி/ இறந்தோரை சரியாக தகனம் செய்வதில்லை அவல நிலையில் துறையூர் எரிவாயு தகனமேடை இறந்தோரை சரியாக தகனம் செய்வதில்லை அவல நிலையில் துறையூர் எரிவாயு தகனமேடை
இறந்தோரை சரியாக தகனம் செய்வதில்லை அவல நிலையில் துறையூர் எரிவாயு தகனமேடை
இறந்தோரை சரியாக தகனம் செய்வதில்லை அவல நிலையில் துறையூர் எரிவாயு தகனமேடை
இறந்தோரை சரியாக தகனம் செய்வதில்லை அவல நிலையில் துறையூர் எரிவாயு தகனமேடை
ADDED : ஜூன் 28, 2024 11:58 PM

திருச்சி:திருச்சி மாவட்டம், துறையூரில் நகராட்சி சார்பில் கடந்த, 2019ம் ஆண்டு, 60 லட்சம் ரூபாய் செலவில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்கப்பட்டது.
இதை பராமரித்து மற்றும் செயல்படுத்தும் பொறுப்பை, ஸ்ரீதர்ஷினி பவுண்டேஷன் அறக்கட்டளை செய்கிறது. இந்த அறக்கட்டளைக்கு முதல், மூன்று ஆண்டுகள் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. அதன்பின், அனுமதி பெறாமல், அந்த அறக்கட்டளை நிர்வாகமே, தகனமேடையை பராமரித்தும், நிர்வகித்தும் வருகிறது.
இந்நிலையில், 'எரிவாயு தகனமேடை முறையாக பராமரிக்கப்படாமல், சிதிலமடைந்து மோசமான நிலையில் உள்ளதால், இறந்தவர்களை முழுமையாகவும், நிம்மதியாகவும் தகனம் செய்ய முடியவில்லை' என, துறையூர் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
சமூக ஆர்வலர் சரவணன் உள்ளிட்டோர் கூறியதாவது:
துறையூர் மயானத்தில் அமைக்கப்பட்டுள்ள நவீன எரிவாயு தகனமேடை முற்றிலும் சேதமடைந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளது. இருந்தும் இன்னும் பயன்பாட்டில் உள்ளது.
அதை நிர்வகிப்பவர்கள், முறையாக பராமரிப்பதில்லை. உடல்களை எரிக்க, முறைகேடாக சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன.
உடலை எரிக்கும் ஆறு வால்வுகளில், மூன்று மட்டுமே வேலை செய்வதால், அரைகுறையாக உடல்கள் எரிக்கப்படுகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்த நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'தகனமேடையை நிர்வாகிப்பவர், நகராட்சியில் முக்கிய பொறுப்பில் உள்ளவருக்கு நெருக்கமானவர். இதனால் அவரிடம் வாடகையும் கேட்க முடியவில்லை.
இதனால், அதை நிர்வகிப்பவர், அங்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதோடு, நகராட்சிக்கு செலுத்த வேண்டிய பணத்தையும் செலுத்தாமல் உள்ளார்.
இறந்தவர்களின் உடல்கள் சரி வர எரிக்கப்படுவதில்லை என்பது உண்மை தான். அதுகுறித்து விசாரிக்கிறோம்' என்றனர்.