/உள்ளூர் செய்திகள்/திருச்சி/ காவிரி தாய்க்கு சீர் வழங்கும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் உற்சவம் காவிரி தாய்க்கு சீர் வழங்கும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் உற்சவம்
காவிரி தாய்க்கு சீர் வழங்கும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் உற்சவம்
காவிரி தாய்க்கு சீர் வழங்கும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் உற்சவம்
காவிரி தாய்க்கு சீர் வழங்கும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் உற்சவம்
ADDED : ஆக 03, 2024 11:54 PM
திருச்சி:ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் படித்துறையில், காவிரி தாய்க்கு, ரெங்கநாதர் ஆடிச்சீர் வழங்கும் உற்சவம் நடைபெற்றது.
தமிழக மக்கள் தாயாக கருதி வணங்கும் காவிரி ஆற்றுக்கு, ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கு நாளில், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சீர் வழங்கும் உற்சவம் நடைபெறும்.
ஆடிப்பெருக்கு நாளான நேற்று காலை 6:00 மணிக்கு, தங்கப் பல்லக்கில், மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்ட நம்பெருமாள், வழிநடை உபயங்கள் கண்டருளியபடி, 11 மணிக்கு அம்மா மண்டபம் படித்துறையில் உள்ள ஆஸ்தான மண்டபம் வந்து சேர்ந்தார்.
மாலை வரை, பக்தர்களுக்கு சேவை சாதித்த நம்பெருமாள், 6:00 மணிக்கு, பட்டுச் சேலை, மாலை, மஞ்சள், குங்குமம், சந்தனம், தாலிச்சரடு ஆகிய மங்கள பொருட்களை, காவிரி தாய்க்கு சீராக வழங்கினார்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்ட நம்பெருமாள் மேலஅடைய வளஞ்சான் வீதி, வெளியாண்டாள் சன்னதியில் மாலை மாற்றி, இரவு மூலஸ்தானம் சென்றடைந்தார். காவிரி தாய்க்கு நம்பெருமாள் சீர் கொடுக்கும் வைபவத்தில் பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.