Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருச்சி/ சுயஉதவி குழுவுக்கு பணம் கட்ட முடியாததால் 2 குழந்தைகளுடன் தாய் துாக்கிட்டு தற்கொலை

சுயஉதவி குழுவுக்கு பணம் கட்ட முடியாததால் 2 குழந்தைகளுடன் தாய் துாக்கிட்டு தற்கொலை

சுயஉதவி குழுவுக்கு பணம் கட்ட முடியாததால் 2 குழந்தைகளுடன் தாய் துாக்கிட்டு தற்கொலை

சுயஉதவி குழுவுக்கு பணம் கட்ட முடியாததால் 2 குழந்தைகளுடன் தாய் துாக்கிட்டு தற்கொலை

ADDED : ஜூலை 24, 2024 11:02 PM


Google News
Latest Tamil News
திருச்சி:திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லுாரைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, கூலித்தொழிலாளி. இவர் கீர்த்திகா, 34, என்பவரை, 15 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். தம்பதியருக்கு, கோகுல்நாத், 14, சாய் நந்தினி, 11, என குழந்தைகள் இருந்தனர். மகளிர் சுய உதவிக்குழுக்களில், கீர்த்திகா கடன் வாங்கி இருந்தார். அவற்றை சரியாக கட்ட முடியவில்லை. இதனால் கீர்த்திகா மனவேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, ரைஸ் மில்லுக்கு வேலைக்கு சென்ற கிருஷ்ணமூர்த்தி, நேற்று அதிகாலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது, கீர்த்திகா, கோகுல்நாத், சாய் நந்தினி ஆகிய மூவரும் துாக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தனர். மண்ணச்சநல்லுார் போலீசார், உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் தவணை கட்ட முடியாத விரக்தியில், இரு குழந்தைகளையும் கொன்று, துாக்கில் தொங்க விட்டு, கீர்த்திகாவும் தற்கொலை செய்து கொண்டதாக தெரிந்தது.

இருப்பினும் பிரேத பரிசோதனை முடிவில் தான், இறப்புக்கான காரணத்தை உறுதியாக செல்ல முடியும் என்று போலீசார் கூறுகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us