/உள்ளூர் செய்திகள்/திருச்சி/ பா.ஜ., அலுவலக காவலாளியை தாக்கிய சிறுவர்களிடம் விசாரணை பா.ஜ., அலுவலக காவலாளியை தாக்கிய சிறுவர்களிடம் விசாரணை
பா.ஜ., அலுவலக காவலாளியை தாக்கிய சிறுவர்களிடம் விசாரணை
பா.ஜ., அலுவலக காவலாளியை தாக்கிய சிறுவர்களிடம் விசாரணை
பா.ஜ., அலுவலக காவலாளியை தாக்கிய சிறுவர்களிடம் விசாரணை
ADDED : ஜூலை 26, 2024 10:55 PM
திருச்சி:திருச்சி, வண்ணாரப்பேட்டை பகுதி பா.ஜ., அலுவலக காவலாளி கோட்டைச்சாமி, 55. இவர்,நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு பணியில் இருந்த போது, அங்கு கூட்டமாக கூடிய சிறுவர்கள், தகாத வார்த்தைகளால் பேசியுள்ளனர்.
கோட்டைச்சாமி கண்டித்ததால், ஆத்திரமடைந்த சிறார்கள், கட்டை மற்றும் கற்களால் அவரை தாக்கி தப்பினர். அக்கம்பக்கத்தினர், காயமடைந்த கோட்டைச்சாமியை மீட்டு, அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அரசு மருத்துவமனை போலீசார், சிசிடிவி காட்சிகள் அடிப்படையில், காவலாளியை தாக்கிய வண்ணாரப்பேட்டை, உறையூர், மல்லிகைபுரம், புத்துார் பகுதிகளை சேர்ந்த 17 வயதுக்குட்பட்ட நான்கு சிறார்களை பிடித்து விசாரிக்கின்றனர்.