Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருச்சி/ போக்குவரத்தை சீரமைக்க மூவருக்கு கோர்ட் உத்தரவு

போக்குவரத்தை சீரமைக்க மூவருக்கு கோர்ட் உத்தரவு

போக்குவரத்தை சீரமைக்க மூவருக்கு கோர்ட் உத்தரவு

போக்குவரத்தை சீரமைக்க மூவருக்கு கோர்ட் உத்தரவு

ADDED : ஜூலை 18, 2024 07:25 PM


Google News
திருச்சி:திருச்சி மாவட்டம், துறையூர் அருகே, புலிவலம் பிரதான சாலையில், நிவாஸ், 24, என்ற இளைஞர், இரண்டு சிறார்களுடன், பைக்கில் வீலிங் சாகசம் செய்து, கடந்த மாதம் சமூக வலைதளத்தில் பதிவிட்டார். ஆபத்தான முறையிலும், வாகன ஓட்டிகளை அச்சுறுத்தம் வகையிலும் அவரின் வீலிங் சாகசம் இருந்ததால். மூவரும் கைது செய்யப்பட்டனர். தங்களை ஜாமினில் விடுவிக்க கோரி, மூன்று பேர் தரப்பிலும், மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி முன் மனு தாக்கல் செய்யப்பட்டது.

விசாரித்த நீதிபதி மணிமொழி, பைக்கில் வீலிங் சாகசம் செய்த நிவாஸ் மற்றும் இரண்டு சிறார்களுக்கு, வித்தியாசமான முறையில் நிபந்தனை ஜாமின் வழங்கினார். 'மூன்று பேரும் இரண்டு வாரத்திற்கு, போக்குவரத்து போலீசாருடன் இணைந்து நகரில், போக்குவரத்தை சீரமைக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்' என உத்தரவிட்டார்.

'இந்த உத்தரவு, இரு சக்கர வாகனங்களில், வீலிங் போன்ற சாகசத்தில் ஈடுபடும் இளைஞர்களுக்கு பாடமாக அமையும்' என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us