ADDED : மார் 13, 2025 01:33 AM
திருச்சி: திருச்சி காந்தி மார்க்கெட் மரக்கடை பகுதியில் உள்ள வள்ளுவர் நகரைச் சேர்ந்த, 5 வயது சிறுமிக்கு வயிற்றுவலி ஏற்பட்டது. டாக்டரிடம் அந்த சிறுமியை அழைத்துச் சென்றபோது, சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளானது தெரிந்தது.
இதுகுறித்து பெற்றோர் புகாரின்படி, கோட்டை அனைத்து மகளிர் போலீசார், அதே பகுதியைச் சேர்ந்த, சிறுமியின் பெரியப்பா மகனான 17 வயது மாணவர் மீது போக்சோ வழக்கு பதிந்து, விசாரிக்கின்றனர்.