/உள்ளூர் செய்திகள்/திருச்சி/ வெடிகுண்டு வீசி மிரட்டல் ரவுடி கைது வெடிகுண்டு வீசி மிரட்டல் ரவுடி கைது
வெடிகுண்டு வீசி மிரட்டல் ரவுடி கைது
வெடிகுண்டு வீசி மிரட்டல் ரவுடி கைது
வெடிகுண்டு வீசி மிரட்டல் ரவுடி கைது
ADDED : ஜூன் 06, 2024 07:17 PM
திருச்சி:திருச்சியில், கையில் பட்டாக் கத்தியோடு, நாட்டு வெடிகுண்டு வீசி மிரட்டல் வீடியோ வெளியிட்ட ரவுடியை, போலீசார் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம், பெட்டவாய்த்தலை பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன், 21. பெட்டவாய்த்தலை போலீசில், இவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், ஒரு கையில் பட்டாக்கத்தியை வைத்த படி, நாட்டு வெடிகுண்டு வீசி, வெடிக்கச் செய்தார். அதை வீடியோ எடுத்தும், சமூகவலைதளங்களில் பரவ விட்டார். இது குறித்து விசாரணை நடத்திய போலீசார், மணிகண்டனை நேற்று கைது செய்தனர்.