/உள்ளூர் செய்திகள்/திருச்சி/ முன்விரோதத்தால் ஈட்டியால் குத்தி விவசாயி கொலை முன்விரோதத்தால் ஈட்டியால் குத்தி விவசாயி கொலை
முன்விரோதத்தால் ஈட்டியால் குத்தி விவசாயி கொலை
முன்விரோதத்தால் ஈட்டியால் குத்தி விவசாயி கொலை
முன்விரோதத்தால் ஈட்டியால் குத்தி விவசாயி கொலை
ADDED : ஜூலை 29, 2024 11:16 PM
திருச்சி : திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள நரசிங்கபுரத்தைச் சேர்ந்தவர் சரவணன், 58, விவசாயி. இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் செல்வராஜ், 60. விவசாயிகளான இருவருக்கும், நிலப்பிரச்னை தொடர்பாக முன்விரோதம் நீண்ட காலமாக இருந்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் செல்வராஜ், தன் வீட்டுக்கு காம்பவுண்ட் சுவர் கட்டினார். அதை சரவணன், தட்டிக்கேட்டார். அப்போது இருவருக்கும் வாய் தகராறு முற்றி, கைகலப்பாக மாறியது. ஆத்திரமடைந்த செல்வராஜ், அங்கிருந்த ஈட்டியால் சரவணனை வயிற்றில் குத்தினார்.
படுகாயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே இறந்தார். இதையடுத்து, செல்வராஜ் துறையூர் போலீஸ் ஸ்டேஷன் சென்று சரண் அடைந்தார். போலீசார் அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.