/உள்ளூர் செய்திகள்/திருவண்ணாமலை/ பெண்ணிடம் நகை பறித்த த.வெ.க., நிர்வாகி கைது பெண்ணிடம் நகை பறித்த த.வெ.க., நிர்வாகி கைது
பெண்ணிடம் நகை பறித்த த.வெ.க., நிர்வாகி கைது
பெண்ணிடம் நகை பறித்த த.வெ.க., நிர்வாகி கைது
பெண்ணிடம் நகை பறித்த த.வெ.க., நிர்வாகி கைது
ADDED : செப் 19, 2025 03:02 AM
ஆரணி:பெண்ணிடம் நகை பறித்த த.வெ.க., நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த எம்.பி., தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் மலர், 61. இவர், இரண்டு நாட்களுக்கு முன் சென்னையில் உள்ள மகனை பார்த்துவிட்டு வீடு திரும்பினார்.
அப்பந்தாங்கல் கூட்ரோட்டில் இறங்கி, ஆற்காடு சாலையில் நடந்து சென்ற போது, முகமூடி அணிந்து பைக்கில் வந்த ஒருவர், மலரின் மூன்றரை சவரன் நகையை பறித்து தப்பினார்.
ஆரணி தாலுகா போலீசார் அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், ராணிப்பேட்டை மாவட்டம், தெனாந்தியலம் கிராமத்தை சேர்ந்த த.வெ.க., நிர்வாகி கவுதம், 25, என்பவர் செயின் பறித்தது தெரிந்தது. அவரை நேற்று முன்தினம் இரவு போலீசார் கைது செய்தனர்.
ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலர் விஜய்மோகன், அவரை த.வெ.க.,வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கியுள்ளார்.