/உள்ளூர் செய்திகள்/திருவண்ணாமலை/பஸ்சில் பெண்ணிடம் ரூ.3 லட்சம் திருட்டுபஸ்சில் பெண்ணிடம் ரூ.3 லட்சம் திருட்டு
பஸ்சில் பெண்ணிடம் ரூ.3 லட்சம் திருட்டு
பஸ்சில் பெண்ணிடம் ரூ.3 லட்சம் திருட்டு
பஸ்சில் பெண்ணிடம் ரூ.3 லட்சம் திருட்டு
ADDED : பிப் 10, 2024 08:26 PM
திருவண்ணாமலை:திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த அரட்டவாடி கிராமத்தைச் சேர்ந்த பிரபு, வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சுமித்ரா, 33, திருவண்ணாமலை அடுத்த நல்லவன்பாளையத்தில் வீடு கட்டி வருகிறார்.
இவர், வீடு கட்ட சீட்டு கட்டி சேமித்து வைத்திருந்த, 3 லட்சம் ரூபாயுடன், திருவண்ணாமலையில் இருந்து அரட்டவாடிக்கு அரசு பஸ்சில் சென்று கொண்டிருந்தார்.
தேனிமலை அருகே பஸ் சென்றபோது, சுமித்ரா பையை பார்த்தபோது, 3 லட்சம் ரூபாயை காணவில்லை. பஸ்சில் வந்தவர்களில் யாராவது பணத்தை திருடியிருக்கலாம் என, சுமித்ரா அளித்த புகார்படி, திருவண்ணாமலை டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.