/உள்ளூர் செய்திகள்/திருவண்ணாமலை/நகராட்சி தலைவர் மகன் விபத்தில் உயிரிழப்புநகராட்சி தலைவர் மகன் விபத்தில் உயிரிழப்பு
நகராட்சி தலைவர் மகன் விபத்தில் உயிரிழப்பு
நகராட்சி தலைவர் மகன் விபத்தில் உயிரிழப்பு
நகராட்சி தலைவர் மகன் விபத்தில் உயிரிழப்பு
ADDED : ஜன 03, 2024 09:29 PM
வந்தவாசி:திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி நகரமன்ற தலைவரான, தி.மு.க.,வை சேர்ந்த ஜலால் என்பவரின் மகன் அப்துல் சுபைது, 21. இவரது நண்பர் ஜாபர், 20. இருவரும் 2ம் தேதி காலை, 10:00 மணிக்கு பிருதுார் - திண்டிவனம் சாலையை இணைக்கும் பைபாஸ் சாலையில் ஹோண்டா பைக்கில் சென்றனர்.
அங்கு பாலம் அமைக்கும் பணி நடப்பதால், சாலை குறுக்கே மண் மேடு அமைத்திருந்தனர். அதைக் கவனிக்காமல் சென்றதில், நிலை தடுமாறி பைக்கிலிருந்து சாலையில் விழுந்தனர். பலத்த காயம் அடைந்த அப்துல் சுபைது, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி மாலை, 6:00 மணிக்கு உயிரிழந்தார்.