ADDED : ஜூன் 27, 2025 03:16 AM
கலசப்பாக்கம்:கலசப்பாக்கம் அருகே, வீட்டிற்கு குழாய் இணைப்பு கொடுத்தபோது, மண் சரிந்து, அதில் சிக்கிய துாய்மை பணியாளர் பலியானார்.
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த காஞ்சி கிராமத்தை சேர்ந்தவர் ராஜி, 43. இவரது வீட்டிற்கு, குடிநீர் இணைப்பு வேண்டி பஞ்., நிர்வாகத்திடம் விண்ணப்பித்தார். இதையடுத்து நேற்று பஞ்., நிர்வாகம் சார்பில் பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டு, பஞ்., துப்புரவு பணியாளரான விக்னேஷ், 20, பள்ளத்தில் இறங்கி குடிநீர் குழாய் இணைப்பை தர முயன்றார்.
அப்போது திடீரென தோண்டிய பள்ளத்தில் மண் சரிந்து, அவரை முழுமையாக மூடியதில், மூச்சுத்திணறி பலியானார். அங்கிருந்தவர்கள் அவரது உடலை மீட்டனர். கடலாடி போலீசார் விசாரிக்கின்றனர்.