/உள்ளூர் செய்திகள்/திருவண்ணாமலை/சிறுமி பாலியல் பலாத்காரம்: வாலிபருக்கு 20 ஆண்டு சிறைசிறுமி பாலியல் பலாத்காரம்: வாலிபருக்கு 20 ஆண்டு சிறை
சிறுமி பாலியல் பலாத்காரம்: வாலிபருக்கு 20 ஆண்டு சிறை
சிறுமி பாலியல் பலாத்காரம்: வாலிபருக்கு 20 ஆண்டு சிறை
சிறுமி பாலியல் பலாத்காரம்: வாலிபருக்கு 20 ஆண்டு சிறை
ADDED : ஜன 06, 2024 05:25 PM
திருவண்ணாமலை : வந்தவாசி அருகே, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு, 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த மேல்பாதிரி கிராமத்தை சேர்ந்தவர், பேக்கரி தொழிலாளி மனோகரன், 23; கடந்த, 2018, அக்., 3 ம் தேதி, தெருவில் விளையாடி கொண்டிருந்த, 7 வயது சிறுமியை அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இது குறித்து, வந்தவாசி அனைத்து மகளிர் போலீசார் விசாரித்து, மனோகரனை போக்சோவில் கைது செய்தனர். இது குறித்த வழக்கு, திருவண்ணாமலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலுள்ள போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி, நேற்று முன்தினம் மாலை, பேக்கரி தொழிலாளி மனோகரனுக்கு, 20 ஆண்டு சிறை, 2,000 ரூபாய் அபராதம், அபராதம் கட்ட தவறினால் மேலும், ஓராண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.