/உள்ளூர் செய்திகள்/திருவண்ணாமலை/ தி.மு.க., பிரமுகர் கொலையில் போலீஸ்காரருக்கு வலைவீச்சு தி.மு.க., பிரமுகர் கொலையில் போலீஸ்காரருக்கு வலைவீச்சு
தி.மு.க., பிரமுகர் கொலையில் போலீஸ்காரருக்கு வலைவீச்சு
தி.மு.க., பிரமுகர் கொலையில் போலீஸ்காரருக்கு வலைவீச்சு
தி.மு.க., பிரமுகர் கொலையில் போலீஸ்காரருக்கு வலைவீச்சு
ADDED : மே 11, 2025 03:08 AM
செய்யாறு:தி.மு.க., பிரமுகர் கொலை வழக்கில், சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள போலீஸ்காரர், அவரது உறவினர் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த உக்கம் பெரும்பாக்கத்தை சேர்ந்த தி.மு.க., வடக்கு மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் திருமலை, 55.
இவரது மனைவி முன்னாள் பஞ்., தலைவி பிரபாவதி, 51. மே 8ம் தேதி, திருமலை செய்யாறு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பாக ஆஜராகிவிட்டு, வீட்டிற்கு திரும்பிய போது, சோழவரம் கிராமம் அருகே வெட்டி கொலை செய்யப்பட்டார்.
துாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். திருமலையை இருவர் வெட்டி கொன்றதும், அவர்கள், 'சஸ்பெண்ட்' ஆன போலீஸ்காரர் ராஜாராம் மற்றும் அவரது உறவினர் குணா என்பதும் தெரியவந்தது.
விசாரணையில், ஏழு ஆண்டுகளுக்கு முன் அப்பகுதியில் நடந்த கோவில் திருவிழாவில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, திருமலை, ராஜாராம் குடும்பங்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
திருமலையின் மனைவி பஞ், தலைவியாக இருந்தபோது, கிராம சபை கூட்டத்தில், இருதரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டு வந்துள்ளது.
இதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, 2022ல் திருமலையை காரில் கடத்திய வழக்கில், ராஜாராம் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார்.
இதன் தொடர்ச்சியாக, திருமலை கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. தலைறைவாக உள்ள ராஜாராம், குணா ஆகியோரை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.