/உள்ளூர் செய்திகள்/திருவண்ணாமலை/மாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்மாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்
மாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்
மாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்
மாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்
UPDATED : பிப் 24, 2024 04:46 PM
ADDED : பிப் 24, 2024 04:44 PM
திருவண்ணாமலை : மாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை வழிபட்டனர்.
திருவண்ணாமலையில் உள்ள மலையையே, பக்தர்கள் அருணாசலேஸ்வரராக நினைத்து வழிபட்டு வருகின்றனர். பவுர்ணமி தோறும், திருவண்ணாமலையில் உள்ள மலையை சித்தர்கள், ஞானிகள், மகான்கள் வலம் சென்று அருணாசலேஸ்வரரை வழிபடுவதாக பக்தர்களின் நம்பிக்கை உள்ளது. பவுர்ணமி நாட்களில் கிரிவலம் சென்றால் சித்தர்கள், மகான்கள் மற்றும் ஞானிகளின் ஆசியும், அருணாசலேஸ்வரரின் அருளாசியும் கிடைக்கும் என பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.இதனால் பவுர்ணமி தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வர். மாசி மாத பவுர்ணமி திதி நேற்று மாலை, 4:55 முதல், இன்று, (24ல்,) மாலை, 6:51 மணி வரை உள்ளது. இந்த நேரத்தில், பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் என்பதால், நேற்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று, கோவிலில், 7 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.