/உள்ளூர் செய்திகள்/திருவண்ணாமலை/பெண் இன்ஸ்பெக்டரை அறைந்த தி.மு.க., நிர்வாகி: கைது கோரி பா.ஜ., ஆர்ப்பாட்டம்பெண் இன்ஸ்பெக்டரை அறைந்த தி.மு.க., நிர்வாகி: கைது கோரி பா.ஜ., ஆர்ப்பாட்டம்
பெண் இன்ஸ்பெக்டரை அறைந்த தி.மு.க., நிர்வாகி: கைது கோரி பா.ஜ., ஆர்ப்பாட்டம்
பெண் இன்ஸ்பெக்டரை அறைந்த தி.மு.க., நிர்வாகி: கைது கோரி பா.ஜ., ஆர்ப்பாட்டம்
பெண் இன்ஸ்பெக்டரை அறைந்த தி.மு.க., நிர்வாகி: கைது கோரி பா.ஜ., ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 06, 2024 07:05 AM
திருவண்ணாமலை : திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் அறங்காவல் குழு தலைவர் ஜீவானந்தம். இவரது தம்பி ஸ்ரீதரன், தி.மு.க.,வை சேர்ந்த திருவண்ணாமலை நகர மன்ற முன்னாள் தலைவர், மாநில செயற்குழு உறுப்பினராக உள்ளார்.
இவரது குடும்பத்தை சேர்ந்த சிவசங்கரி என்பவர் கடந்த, 27ம் தேதி அருணாசலேஸ்வரர் கோவிலில், உண்ணாமுலையம்மன் சன்னதியில் தரிசனம் செய்து கொண்டிருந்தார். பாதுகாப்பு பணியில் இருந்த தேசூர் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் காந்திமதி, மற்ற பக்தர்களுக்கு மறைக்காமல் சுவாமி கும்பிடுமாறு, சிவசங்கரியிடம் கூறினார். இதில் ஆத்திரமடைந்த சிவசங்கரி, ஸ்ரீதரனிடம் இது குறித்து கூறியுள்ளார்.
ஆவேசமடைந்த ஸ்ரீதரன், இன்ஸ்பெக்டர் காந்திமதியை பக்தர்கள் முன்னிலையில், கன்னத்தில் அறைந்ததில், நிலை குலைந்து விழ முயன்றவரை, பக்தர்கள் தடுத்து காப்பாற்றினர். ஸ்ரீதரனை காப்பாற்றும் விதமாக பொதுமக்கள், பக்தர்கள் மொபைலில் வீடியோ எடுத்த காட்சி மற்றும் கோவில் 'சிசிடிவி'யில் பதிவான காட்சி ஆகியவற்றை பறிமுதல் செய்து, திருவண்ணாமலை டவுன் டி.எஸ்.பி., குணசேகரன் செயல்பட்டார்.
இதுகுறித்து, டி.ஜி.பி., சங்கர் ஜிவாலுக்கு தகவல் வந்ததையடுத்து, அவரது உத்தரவின்படி, ஸ்ரீதரன், சிவசங்கரி மற்றும் அங்கிருந்த கோவில் ஊழியர் ரமேஷ் மீது திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் இவர்கள் தலைமறைவாகிவிட்டனர். இவர்களை கைது செய்ய கோரி நேற்று, பா.ஜ., சார்பில், தெற்கு மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
முன் ஜாமின் மனு தள்ளுபடி
திருவண்ணாமலை டவுன் போலீசார், நான்கு பிரிவுகளில் ஸ்ரீதரன் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து ஸ்ரீதரன் முன் ஜாமின் கேட்டு, திருவண்ணாமலை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. இதில் இரு தரப்பு விவாதங்களை கேட்ட நீதிபதி மதுசூதனன், ஸ்ரீதரனின் முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.