/உள்ளூர் செய்திகள்/திருவண்ணாமலை/ தி.மலை கோவிலில் இரு மாநில பக்தர்கள் மோதல் தி.மலை கோவிலில் இரு மாநில பக்தர்கள் மோதல்
தி.மலை கோவிலில் இரு மாநில பக்தர்கள் மோதல்
தி.மலை கோவிலில் இரு மாநில பக்தர்கள் மோதல்
தி.மலை கோவிலில் இரு மாநில பக்தர்கள் மோதல்
ADDED : ஜூன் 02, 2025 04:09 AM
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில், சுவாமி தரிசனம் செய்ய வரிசையில் நிற்பதில், ஆந்திர மற்றும் கர்நாடக மாநில பக்தர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தினமும், பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு பகுதிகளிலிருந்து சுவாமி தரிசனத்திற்கு வந்து செல்கின்றனர். வார விடுமுறை நாட்களில் கூடுதலான பக்தர்கள் வருகின்றனர். இதில், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் அதிகமாக வருவதால், 4 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்கின்றனர்.
நேற்று, கர்நாடக மற்றும் ஆந்திர மாநில பக்தர்கள், 50 ரூபாய் கட்டண தரிசன டிக்கெட் தரிசன வரிசையில், அம்மணி அம்மன் கோபுர வாயில் எதிரே நின்றிருந்தனர். அப்போது, வரிசையில் நிற்பதில் இரு கோஷ்டிக்கு இடையே தகராறு ஏற்பட்டு, ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். திருவண்ணாமலை டவுன் போலீசார், மோதலில் ஈடுபட்டவர்களை விசாரணைக்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர்.