/உள்ளூர் செய்திகள்/திருவண்ணாமலை/ அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை தீப திருவிழா பந்தக்கால் முகூர்த்தம் அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை தீப திருவிழா பந்தக்கால் முகூர்த்தம்
அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை தீப திருவிழா பந்தக்கால் முகூர்த்தம்
அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை தீப திருவிழா பந்தக்கால் முகூர்த்தம்
அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை தீப திருவிழா பந்தக்கால் முகூர்த்தம்
ADDED : செப் 23, 2025 02:12 AM
திருவண்ணாமலை, திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை, தீப திருவிழா பந்தக்கால் முகூர்த்தம் நடக்க உள்ளது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப திருவிழா நவ., 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, 10 நாட்கள் நடக்கும். இதில் டிச., 3ல் கோவில் கருவறை எதிரில் அதிகாலை, 4:00 மணிக்கு பரணி தீபமும், மாலை, 6:00 மணிக்கு, 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில், மஹா தீபமும் ஏற்றப்படும்.
விழா நடக்கும், 10 நாட்களும், காலை, இரவு வெவ்வேறு வாகனங்களில், பஞ்ச மூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமண்யர், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகியோர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். விழாவில், 7ம் நாளில் பஞ்ச மூர்த்திகள் தேரோட்டம் நடக்கும். இந்நிலையில், விழா பூர்வாங்க பணிகளான தேர் பழுது பார்த்தல், சுவாமி வீதி உலா வரும் வாகனம் பழுது பார்த்தல், வாகனங்கள் வண்ணம் பூசுதல், விழா பத்திரிக்கை அச்சடித்தல், உள்ளிட்ட பல்வேறு பணிகள் தொடங்கப்பட உள்ளன. இதற்காக நாளை, கோவிலின் ராஜ கோபுரம் எதிரில், 7:30 மணியளவில், பந்தக்கால் முகூர்த்தம் செய்யப்பட்டு பணிகள் தொடங்கும். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது.