/உள்ளூர் செய்திகள்/திருவண்ணாமலை/ பைக்-மினி லாரி மோதி விபத்து: இருவர் பலி பைக்-மினி லாரி மோதி விபத்து: இருவர் பலி
பைக்-மினி லாரி மோதி விபத்து: இருவர் பலி
பைக்-மினி லாரி மோதி விபத்து: இருவர் பலி
பைக்-மினி லாரி மோதி விபத்து: இருவர் பலி
ADDED : செப் 07, 2025 01:24 AM
சந்தவாசல் :சந்தவாசல் அருகே பைக்கும், மினி லாரியும் மோதிய விபத்தில், இருவர் சம்பவ
இடத்திலேயே பலியாயினர்.
திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் சந்தவாசல் அருகே கேளூரை சேர்ந்தவர் மணிகண்டன், 35. இவர், தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி மஞ்சுளா, 30. இவருடைய சகோதரி அமுதா, 25. இவர்கள் மூவரும், ஒரே ேஹாண்டா ைஷன் பைக்கில் நேற்று முன்தினம் ஆரணிக்கு சென்று விட்டு, அங்கிருந்து இரவு, 9:30 மணியளவில் கண்ணமங்கலத்துக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, வேலுாரில் இருந்து ஆரணி நோக்கி கொய்யா பழங்களை ஏற்றி சென்ற மினி லாரி, கொங்கராம்பட்டு தொடக்கப்பள்ளி அருகே, வேகத்தடையில் ஏறி இறங்கியது. அந்த சமயத்தில், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், எதிரே மணிகண்டன் ஓட்டி வந்த பைக் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் மணிகண்டன், அமுதா ஆகியோர் துாக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தனர். படுகாயமடைந்த மஞ்சுளா, வேலுார் அடுத்த பூட்டுதாக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். விபத்து ஏற்படுத்திய வேன் கவிழ்ந்ததில் டிரைவர், கிளீனர் லேசான காயத்துடன் அங்கிருந்து தப்பினர். கண்ணமங்கலம் போலீசார்
விசாரணை நடத்தி வருகின்றனர்.


