/உள்ளூர் செய்திகள்/திருவண்ணாமலை/குடியரசு தின பாதுகாப்பை முன்னிட்டு டில்லிக்கு ரயிலில் பார்சல் அனுப்ப தடைகுடியரசு தின பாதுகாப்பை முன்னிட்டு டில்லிக்கு ரயிலில் பார்சல் அனுப்ப தடை
குடியரசு தின பாதுகாப்பை முன்னிட்டு டில்லிக்கு ரயிலில் பார்சல் அனுப்ப தடை
குடியரசு தின பாதுகாப்பை முன்னிட்டு டில்லிக்கு ரயிலில் பார்சல் அனுப்ப தடை
குடியரசு தின பாதுகாப்பை முன்னிட்டு டில்லிக்கு ரயிலில் பார்சல் அனுப்ப தடை
ADDED : ஜன 25, 2024 01:05 PM
திருவண்ணாமலை : குடியரசு தின பாதுகாப்பை முன்னிட்டு, ரயில்களில் டில்லிக்கு பார்சல் அனுப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் நாளை, 26ல், குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், ரயில்வே ஸ்டேஷன்கள், பஸ் ஸ்டாண்ட், சுற்றுலா, வழிபாட்டு தலங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், முக்கிய ரயில்வே ஸ்டேஷன்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்தும் பணியில், ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் ஈடுபட்டுள்ளனர். இவர்களுடன் அந்தந்த மாநில ரயில்வே போலீசாரும், பாதுகாப்பு பணியை அதிகப்படுத்தி உள்ளனர். இதில், சென்னை, மதுரை, திருச்சி, காட்பாடி அரக்கோணம், ஜோலார்பேட்டை உள்ளிட்ட பெரு ரயில்வே ஸ்டேஷன்களில், ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரும், தமிழக ரயில்வே போலீசாரும் இணைந்து, பாதுகாப்பு பணி மற்றும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும், டில்லிக்கு செல்லும் அனைத்து ரயில்களிலும் பார்சல் அனுப்ப வரும், 26ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி நேற்று முன்தினம் முதல், அனைத்து ரயில்வே ஸ்டேஷன்களிலும், டில்லிக்கான பார்சல் புக்கிங் நிறுத்தப்பட்டு, மற்ற ஊர்களுக்கு பார்சல் புக்கிங் அனைத்தையும், ஆர்.பி.எப்., போலீசார் சோதனைக்கு பிறகே அனுப்பி வைக்கப்படுகிறது.