/உள்ளூர் செய்திகள்/திருவண்ணாமலை/தி.மலை கோவிலில் ஆனி பிரம்மோற்சவ விழா தொடக்கம்தி.மலை கோவிலில் ஆனி பிரம்மோற்சவ விழா தொடக்கம்
தி.மலை கோவிலில் ஆனி பிரம்மோற்சவ விழா தொடக்கம்
தி.மலை கோவிலில் ஆனி பிரம்மோற்சவ விழா தொடக்கம்
தி.மலை கோவிலில் ஆனி பிரம்மோற்சவ விழா தொடக்கம்
ADDED : ஜூலை 08, 2024 07:32 AM
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆனி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலிலுள்ள தங்க கொடிமரத்தில் ஆண்டுக்கு, 4 முறை கொடியேற்றம் நடக்கிறது. சூரியன் தெற்கு திசையை நோக்கி நகரும் காலமான ஆடி மாதத்தை வரவேற்கும் விதமாக, ஆனி பிரம்மோற்சவம் விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நேற்று காலை ஆனி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின் விநாயகர், அருணாசலேஸ்வரர் உடனுறை உண்ணாமலை அம்மன் மற்றும் பராசக்தி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, 64 அடி உயர தங்க கொடிமரம் முன்பு எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடந்தது. விழா தொடர்ந்து, 10 நாட்களுக்கு நடக்கும்.