/உள்ளூர் செய்திகள்/திருவண்ணாமலை/ சிறுமி பலாத்காரம் வழக்கில் வாலிபருக்கு வாழ்நாள் சிறை சிறுமி பலாத்காரம் வழக்கில் வாலிபருக்கு வாழ்நாள் சிறை
சிறுமி பலாத்காரம் வழக்கில் வாலிபருக்கு வாழ்நாள் சிறை
சிறுமி பலாத்காரம் வழக்கில் வாலிபருக்கு வாழ்நாள் சிறை
சிறுமி பலாத்காரம் வழக்கில் வாலிபருக்கு வாழ்நாள் சிறை
ADDED : ஜூன் 07, 2024 08:13 PM
திருவண்ணாமலை;திருவண்ணாமலை அருகே, பலாத்காரம் செய்து கர்ப்பமான நிலையில், வாலிபர் திருமணம் செய்ய மறுத்ததால், சிறுமி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த வழக்கில், வாலிபருக்கு வாழ் நாள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
திருவண்ணாமலை அடுத்த கிளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ், 27. இவர், அப்பகுதியை சேர்ந்த, 16 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி, 2020, அக்., 21ல், மிரட்டி பலாத்காரம் செய்தார்.
இதேபோன்று பல முறை மிரட்டி பலாத்காரம் செய்ததில், சிறுமி கர்ப்பமானார். திருமணம் செய்து கொள்ளுமாறு, சதீஷிடம் சிறுமி கேட்டபோது, அவர் திருமணம் செய்து கொள்ள மறுத்துள்ளார். விரக்தி அடைந்த சிறுமி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மங்கலம் போலீசார், சதீைஷ கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி பார்த்தசாரதி, வழக்கை விசாரித்து, சதீஷூக்கு வாழ் நாள் முழுதும் சிறை தண்டனை விதித்து நேற்று முன்தினம் மாலை தீர்ப்பளித்தார்.
-----