/உள்ளூர் செய்திகள்/திருவண்ணாமலை/ சுடுகாடு எரிமேடை கூரை விழுந்து தொழிலாளி பலி சுடுகாடு எரிமேடை கூரை விழுந்து தொழிலாளி பலி
சுடுகாடு எரிமேடை கூரை விழுந்து தொழிலாளி பலி
சுடுகாடு எரிமேடை கூரை விழுந்து தொழிலாளி பலி
சுடுகாடு எரிமேடை கூரை விழுந்து தொழிலாளி பலி
ADDED : ஆக 07, 2024 08:49 AM
வேட்டவலம், : திருவண்ணாமலை மாவட்டம், வேட்டலம் பாரதி தெருவைச் சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன், 60, இவர் வேட்டவலம் பேரூராட்சியிலுள்ள சுடுகாட்டில் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இந்நிலையில், வேட்டவலத்தைச் சேர்ந்த பெண் இறந்தார். சுடுகாட்டிலுள்ள எரிமேடையில் நேற்று முன்தினம் மாலையில் அவரது உடல் எரிக்கப்பட்டது.
அப்போது, எரிமேடை அருகே நின்றிருந்த ஹரிகிருஷ்ணன் மீது எரிமேடையின் சிமென்ட் கூரை விழுந்ததில் படுகாயமடைந்தார். திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்த நிலையில் அவர் நேற்று இறந்தார்.