/உள்ளூர் செய்திகள்/திருவண்ணாமலை/ குழந்தையிடம் துாக்கி மாட்டி விளையாடிய தந்தை இறுகி பலி குழந்தையிடம் துாக்கி மாட்டி விளையாடிய தந்தை இறுகி பலி
குழந்தையிடம் துாக்கி மாட்டி விளையாடிய தந்தை இறுகி பலி
குழந்தையிடம் துாக்கி மாட்டி விளையாடிய தந்தை இறுகி பலி
குழந்தையிடம் துாக்கி மாட்டி விளையாடிய தந்தை இறுகி பலி
ADDED : ஆக 01, 2024 11:36 PM
செங்கம்:திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த மேல்செங்கத்தை சேர்ந்த லாரி டிரைவர் ஜெகதீஷ், 35. மனைவி மற்றும் ஒன்றாம் வகுப்பு படிக்கும், 6 வயது மகன் உள்ளனர். நேற்று முன்தினம் மாலை, தன் தாய் வீட்டிற்கு சென்ற இவரது மனைவி, சிறிது நேரத்திற்கு பின் வீடு திரும்பிய போது, படுக்கை அறை மின்விசிறியில் ஜெகதீஷ் துாக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார்.
அதிர்ச்சியடைந்த அவர், ஜெகதீஷ் மொபைல் போனை எடுத்து பார்த்தபோது, குழந்தையிடம், 'அப்பா இப்ப சாகப்போறேன். அதை வீடியோ எடுக்கலாமா' என கேட்டு, மொபைல்போன் வீடியோவை 'ஆன்' செய்து வைத்து, குழந்தையுடன் பேசிக்கொண்டே அறையிலிருந்த கட்டில் மீது நின்றவாறு மின்விசிறியில் துண்டால் தன் கழுத்தில் சுருக்கு போட்டுள்ளார்.
அப்போது கழுத்து இறுக்கிய நிலையில், அதில் இருந்து மீள முடியாமல், சில நொடியில் துடிதுடித்து உயிரிழந்துள்ளார். தந்தை விளையாடுகிறார் என அப்பாவியாக பார்த்துக் கொண்டிருந்த மகன், அசைவற்று கிடந்த தந்தைக்கு மூச்சு இருக்கிறதா என, கை வைத்து பார்த்து, மூச்சு நின்று விட, அவரை காப்பாற்ற முயற்சிக்கும் நிகழ்வு வீடியோவில் பதிவாகி இருந்தது.
விளையாட்டாக வீடியோ எடுக்க முயற்சித்து, அது விபரீதத்தில் முடிந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மேல்செங்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.