/உள்ளூர் செய்திகள்/திருவண்ணாமலை/ சார் - பதிவாளர் அலுவலகத்தில் ரூ.2 லட்சம் பறிமுதல் சார் - பதிவாளர் அலுவலகத்தில் ரூ.2 லட்சம் பறிமுதல்
சார் - பதிவாளர் அலுவலகத்தில் ரூ.2 லட்சம் பறிமுதல்
சார் - பதிவாளர் அலுவலகத்தில் ரூ.2 லட்சம் பறிமுதல்
சார் - பதிவாளர் அலுவலகத்தில் ரூ.2 லட்சம் பறிமுதல்
ADDED : ஜூலை 10, 2024 08:39 PM
திருவண்ணாமலை:திருவண்ணாமலை, வேலுார் சாலையிலுள்ள சார் - பதிவாளர் அலுவலகம் - 1ல் மனை வரன்முறை படுத்தப்படாத மனைகள் பத்திரப்பதிவு செய்ய, லஞ்சம் பெறுவதாக புகார் சென்றது. அதன் படி, நேற்று மாலை அங்கு, திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., வேல்முருகன் தலைமையிலான ஏழு பேர் கொண்ட போலீசார் சோதனை நடத்தினர்.
அப்போது, அலுவலகத்தில் முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்து, கணக்கில் வராத, 2 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். மேலும், புரோக்கர்கள் மூலம் கூகுள் பே, போன் பே உள்ளிட்ட இணையவழி மூலம் லஞ்ச பணம் பரிவர்த்தனை நடந்துள்ளதா என, அலுவலக ஊழியர்கள் மற்றும் புரோக்கர்களின் மொபைல்போனை பறிமுதல் செய்து, ஆய்வு செய்து வருகின்றனர்.