/உள்ளூர் செய்திகள்/திருவண்ணாமலை/ 'அரசு சேவைகள் ஒரே இடத்தில் கிடைக்க 'மக்களுடன் முதல்வர்' திட்டம் தொடக்கம்' 'அரசு சேவைகள் ஒரே இடத்தில் கிடைக்க 'மக்களுடன் முதல்வர்' திட்டம் தொடக்கம்'
'அரசு சேவைகள் ஒரே இடத்தில் கிடைக்க 'மக்களுடன் முதல்வர்' திட்டம் தொடக்கம்'
'அரசு சேவைகள் ஒரே இடத்தில் கிடைக்க 'மக்களுடன் முதல்வர்' திட்டம் தொடக்கம்'
'அரசு சேவைகள் ஒரே இடத்தில் கிடைக்க 'மக்களுடன் முதல்வர்' திட்டம் தொடக்கம்'
ADDED : ஜூலை 11, 2024 09:57 PM
திருவண்ணாமலை:''அரசின் அனைத்து துறைகளின் சேவைகளும், மக்களுக்கு ஒரே இடத்தில் கிடைக்க பெறும் வகையில், 'மக்களுடன் முதல்வர்' திட்டம் தொடங்கப்பட்டுள்ளது,'' என அமைச்சர் வேலு பேசினார்.
திருவண்ணாமலை அடுத்த கீழ்செட்டிப்பட்டு பஞ்.,ல், 'மக்களுடன் முதல்வர்' முகாமை துவக்கி வைத்த அவர் பேசியதாவது:
'மக்களுடன் முதல்வர்' திட்டம், அரசின் அனைத்து துறைகளின் சேவைகளும் ஒரே இடத்தில் கிடைக்கப் பெறும் வகையில் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. முகாம் மூலமாக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, மற்றும் புற நகர் பகுதி என, 2,508 முகாம்கள் மூலம், 13 முக்கிய துறைகள் மூலமாக, 44 சேவை தொடர்பான, 9.04 லட்ச மனுக்கள் பெற்று, 8.04 லட்சம் மனுக்களுக்கு ஏற்கனவே தீர்வு காணப்பட்டுள்ளது. மேலும் மக்களை தேடி மருத்தவம் திட்டம் மூலம், திருவண்ணாமலை மாவட்டத்தில், 3.75 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். விபத்திலிருந்து மீட்டு, அவர்களது உயிரை காப்பாற்றும் 'நம்மை காக்கும் - 48' திட்டம் வாயிலாக, தமிழ்நாட்டில், 8.50 லட்சத்திற்கும் மேற்பட்டோரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளன. மக்கள் இருக்குமிடம் தேடி அனைத்து அரசு துறை அதிகாரிகள் சேவைகளை வழங்க வேண்டும் என்ற அடிப்படையில், மனுக்களை பெற்று, பிரச்னைகளை ஒரு மாதத்திற்குள் தீர்வு காண வேண்டும் என்ற நோக்கத்திலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர் பேசினார்.
முகாமில், கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.