/உள்ளூர் செய்திகள்/திருவண்ணாமலை/ பல்சர் மீது மோதிய மொபட் அரசு டாக்டர் பரிதாப சாவு பல்சர் மீது மோதிய மொபட் அரசு டாக்டர் பரிதாப சாவு
பல்சர் மீது மோதிய மொபட் அரசு டாக்டர் பரிதாப சாவு
பல்சர் மீது மோதிய மொபட் அரசு டாக்டர் பரிதாப சாவு
பல்சர் மீது மோதிய மொபட் அரசு டாக்டர் பரிதாப சாவு
ADDED : ஜூலை 20, 2024 05:55 PM
வந்தவாசி : வந்தவாசி அருகே, பைக், மொபட் மோதிக் கொண்டதில், அரசு டாக்டர் பலியானார்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த ஓசூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன், 27; வந்தவாசி அருகே மழையூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர். நேற்று முன்தினம் வழக்கம்போல் பணிக்கு, பல்சர் பைக்கில் சென்றார். வந்தவாசி - சேத்துப்பட்டு நெடுஞ்சாலையில், கீழ்சாத்தமங்கலம் கிராமம் கூட்டுச்சாலை அருகே, எதிரே வந்த டி.வி.எஸ்., மொபட், பைக் நேருக்குநேர் மோதிக் கொண்டன. இதில் படுகாயமடைந்த மணிகண்டன், மேல் சிகிச்சைக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் இறந்தார். இதுகுறித்து பொன்னுார் போலீசார் விசாரிக்கின்றனர்.