/உள்ளூர் செய்திகள்/திருவண்ணாமலை/ வீடு கட்டும் திட்டத்தில் ரூ.19 லட்சம் மோசடி வீடு கட்டும் திட்டத்தில் ரூ.19 லட்சம் மோசடி
வீடு கட்டும் திட்டத்தில் ரூ.19 லட்சம் மோசடி
வீடு கட்டும் திட்டத்தில் ரூ.19 லட்சம் மோசடி
வீடு கட்டும் திட்டத்தில் ரூ.19 லட்சம் மோசடி
ADDED : ஜூலை 12, 2024 08:31 PM
தண்டராம்பட்டு:திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு யூனியனில், 2019 -- 2023 வரை, பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், வீட்டிற்கு, 2.70 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, வீடு கட்டும் பயனாளிகள் வங்கி கணக்கில் நான்கு தவணையாக பணத்தை, பி.டி.ஓ., மற்றும் துணை பி.டி.ஓ., இன்ஜினியர், பணி மேற்பார்வையாளர் ஆகியோர் அடையாள எண் வாயிலாக, ஓ.டி.பி., எண் அனுப்பி, பயனாளிகளின் வங்கி கணக்கில் பணம் செலுத்தி வந்தனர்.
தண்டராம்பட்டு யூனியன் அலுவலக தற்காலிக ஊழியர் சூர்யா, அரசு அலுவலக பயன்பாட்டிற்கு வழங்கப்பட்ட மொபைல் எண்ணை பயன்படுத்தி, வீடு கட்டும் பயனாளிகள் வங்கி கணக்கில் பணத்தை அனுப்பாமல், அவரது நண்பர்களின் கணக்கிற்கு, 19 லட்சம் ரூபாய் அனுப்பியுள்ளார். அவர் வேறு இடத்திற்கு மாறுதலாகி சென்றுள்ளார்.
அந்த இடத்திற்கு வேறு ஒருவர் பணியில் சேர்ந்து, கணக்கை சரிபார்த்த போது, பயனாளிகளின் வங்கி கணக்கில் பணம் செல்லவில்லை என, தெரியவந்தது. சூர்யா தலைமறைவானார். கலெக்டர் பாஸ்கர பாண்டியன் விசாரிக்கிறார்.